முயல், ஆமை கதை பற்றி கேட்டிருப்பீர்கள். முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஆமையை விட வேகமாக ஓடிய முயல் இலக்கை எட்டும் முன், கொஞ்ச நேரம் இருக்கிறதே ஒரு குட்டி தூக்கம் போடுவோம் என்று நினைத்து நன்றாக தூங்கிவிட்டது. மெதுவாக வந்த ஆமை இலக்கை தொட்டு வெற்றி பெற்றது. இந்த கதை மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும் . ஆனால் இதன் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு கதைகள் இருக்கிறது.
இரண்டாவது கதையை பார்ப்போம். ஆமை தன்னை ஜெயித்து விட்டதால் கோபம் கொண்ட முயல் மீண்டும் தன்னுடைய பந்தயத்தில் கலந்து கொள்ளுமாறு ஆமையிடம் கேட்டது. ஆமையும் ஒப்புக்கொண்டது. போட்டி தொடங்கியது . இந்த முறை வேகமாக சென்ற முயல் இல்லக்கை தொட்டது. ஆனால் இந்த முறையும் முயல் தோற்றது காரணம் இது மெதுவாக ஓடும் போட்டி.
மூன்றாவது கதை : இரண்டு முறையும் ஆமையிடம் தோற்ற முயல் இந்த முறை போட்டியின் முடிவை தீர்மானிக்க அருகில் இருந்த குரங்கின் உதவியை நாடியது. குரங்கு ஆமையையும், முயலையும் ஒற்றுமை படுத்த வேண்டுமென நினைத்து ஒரு போட்டியை அறிவித்தது. கொஞ்ச தூரம் நிலத்திலும், நிலத்தை அடுத்து உள்ள ஆற்றையும் கடந்தால் வெற்றி என்று முடிவு செய்யப்பட்டது. முயலால் நில்லத்தை வேகமாக கடந்து விட முடியும், ஆனால் ஆற்றைதாண்டுவது முடியாத காரியம் ஆமையை பொருத்தவரை ஆற்றை சுலபமாக கடந்துவிட முடியும். ஆனால் நில்லத்தை வேகமாக கடக்க முடியாது. இரண்டும் சற்று நேரம் யோசித்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. நிலத்தில் ஆமையை தூக்கி கொண்டு முயல் வேகமாக செல்வது என்றும், ஆமையின் மீது முயல் ஏறிக் கொண்டு ஆற்றைக் கடப்பது என்றும் முடிவு செய்தது அதன்படியே நடந்து கொண்டன. வெற்றியை முயலும் ஆமையும் சமமாக பங்கிட்டுக் கொண்டன.
முதல் கதையில் முயில் சோம்பேறித்தனமும், அலட்சியமும் அதற்கு தோல்வியை ஏற்படுத்திக்கோடுத்தன. ' தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் முயற்சி செய்வது தவறில்லை ' என்ற ஆர்வமும் நம்பிக்கையும் ஆமைக்கு வெற்றியை தேடித்தந்தது.
இரண்டாவது கதையில் போட்டி என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் போட்டியில் கலந்து கொண்ட முயலின் அவசரமும் நிதானமின்மையும் அதற்கு தோல்வியை தந்தது. தனது நிலையை தெரிந்து போட்டியை மாற்றிய ஆமாயின் சமயோஜிதம், புத்திசாலித்தன்மை அதற்கு வெற்றியை தேடித்தந்தது.
மூன்றாவது கதையில் முயலும், ஆமையும் ஒன்றுபட்டு செயல்பட்டதால் போட்டியை எளிதாக வெல்ல முடிந்தது. இது எல்லோரும் ஒன்றுப்பட்டு , ஒத்த கருத்துடன், கூட்டு முயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்துகிறது.
இது சமுதாய சங்கத்திற்கு எதிரானது அல்ல! சேவை எண்ணமும், தியாக உள்ளம் கொண்டவர்கள் இணைந்து நடத்தும் ஓர் தொண்டு நிறுவனம், இது Mr. K. Munuswamy, Mr. Pon.Rangarajan, Mr. Marimuthu அவர்கள் ஸ்தாபகராகவும், நண்பர்கள் பைனான்ஸின் பங்குதாரர்கள் இதன் நிர்வாக உறுப்பினர்களாக கொண்டு, மேல் குறிப்பிட்ட முகவரியில், சென்னையை தலைமை இடமாக கொண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
![]() |
இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், சமுதாய நல்லிணக்கம் மற்றும் சமுதாய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பது. |
![]() |
இந்த அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குதல், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க ஊக்கதொகை வழங்குதல், தொழிற்பயிற்சி அளித்தல். |
![]() |
கல்வி,உடல்நலம்,மருத்தவம்,சுற்றுபுறச்சூழல் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். |
![]() |
இரத்ததானம்,கண்தானம்,செயவதை ஊக்குவித்தல்,மனித நேயத்தை பேணி சமூக நல்லிணக்கதிற்கு பாடுபடுதல். |
![]() |
திருமண தகவல் மைய அமைப்பு மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல்,ஏழை மக்களுக்கு திருமண நிதியுதவி அளித்தல். |
![]() |
இயற்கை இடர்பாடுகளால் துன்பப்படும் மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகழ் அளித்தல். |
![]() |
இன்றைய உலகநாடுகளின் முக்கிய பிரச்சனையான உலக வெப்பமயமாதல், சுற்று சுகாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்து செயலாற்றுவதுடன் மக்களிடையே இதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். |
![]() |
ஊனமுற்றோர்,மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஆகியோருக்கு முறையான காப்பகங்கள் மூலம் பாதுகாப்பு அளித்தல். |
![]() |
வருங்கால நம் சமுதாய மக்கள் சுயமாக கல்விக்கூடம் தொழிற்கூடங்கள் அமைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதும் மற்றும் அத்துறை சார்ந்தவர்களை கொண்டு பயிற்சி அளிப்பது. |
![]() |
அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் நம் சமுதாய ஏழை மக்களுக்கு முழுமையாக சென்றடைய பாடுபடுதல்.கடந்த இரண்டு ஆண்டுகளில் நண்பர்கள் பைனான்ஸின் பங்குதாரர்கள் அவர்கள் பெறும் இலாப தொகையில் பெரும்பகுதியை பழங்குடியின நண்பர்கள், கல்வி மற்றும் நல அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். அத்தொகையினை கொண்டு நம் சமுதாய மக்களுக்கு பல நலதிட்ட உதவிகள் செய்துள்ளோம். |




